உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பா.ஜ., பொருளாதார பிரிவு கலந்தாய்வு கூட்டம்

 பா.ஜ., பொருளாதார பிரிவு கலந்தாய்வு கூட்டம்

கடலுார்: கடலுாரில் பா.ஜ., பொருளாதார பிரிவு விழுப்புரம் கோட்ட மாவட்ட நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட பொருளாதார பிரிவு மாவட்ட அமைப்பாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர் பொருளாதார பிரிவு மாநில அமைப்பாளர் காயத்ரி சுரேஷ், பொருளாதார பிரிவின் செயல்பாடுகள் குறித்து பேசினார். புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்யப்பட்டனர். கூட்டத்தில், பொருளாதார பிரிவு மாநில செயலா ளர்கள் ரெகன்யா, ஜெனித் மேகநாதன், மாவட்ட அமைப்பாளர்கள் சுரேஷ், ராமலிங்கம், ராமு, பொதுச்செயலாளர் ராமமூர்த்தி, மாநில செயலாளர் ஸ்ரீதர், இணை அமைப்பாளர்கள் சுந்தர், ரமேஷ் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி