உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தி.மு.க.,  அரசை கண்டித்து பா.ஜ., போஸ்டரால் பரபரப்பு

தி.மு.க.,  அரசை கண்டித்து பா.ஜ., போஸ்டரால் பரபரப்பு

பெண்ணாடம் :பெண்ணாடத்தில் தி.மு.க., அரசை கண்டித்து பா.ஜ., சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு நிலவியது. கரூரில், கடந்த 27ம் தேதி இரவு த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது. இதில், ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் இறந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பா.ஜ., கடலுார் மேற்கு மாவட்ட தலைவர் தமிழழகன் சார்பில், தி.மு.க., அரசே, பதவி விலகு... கண்டிக்கிறோம்... கண்டிக்கிறோம்... கரூரில் நடந்த பொது கூட்டத்திற்கு முறையாக பாதுகாப்பு வழங்காமல் 41 பேரை கொன்ற தி.மு.க., அரசே... ஸ்டாலின் அவர்களே உடனடியாக பதவி விலகு என்ற போஸ்டர் பல இடங்களில் ஒட்டப்பட்டிருந்தது. இந்த போஸ்டர்களால் பெண்ணாடத்தில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ