தொகுதி வளர்ச்சி பணிகள் பண்ருட்டி எம்.எல்.ஏ., மனு
கடலுார்: பண்ருட்டியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டுமென, கலெக்டரிடம் மோகன் எம்.எல்.ஏ., மனு அளித்தார். இதுகுறித்து கடலுாரில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம அளித்த மனு: பண்ருட்டி, திருத்துறையூரில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையில் நுாலக கட்டடம் அமைக்க அனுமதி வழங்கி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். நத்தம் ஊராட்சியில் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும். இத்தொதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் வீடு இல்லாத பயனாளிகளுக்கு தமிழக அரசின் ‘வெற்றி இல்லம்’ திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்ட அனுமதி பெற்று தர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது..