கடலில் மூழ்கிய சிறுவன் உடல் கண்டெடுப்பு
கடலுார் : கடலுார் துறைமுகம் அருகே படகிலிருந்து தவறி விழுந்த சிறுவனின் இறந் த உடல் கரை ஒதுங்கியது. கடலுார் துறைமுகம் அடுத்த சித்திரைப்பேட்டை மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் மகன் முகுந்தன்,16. இவர் கடந்த 8ம் தேதி அதிகாலை அதே பகுதியைச் சேர்நத் வாலிபர்களுடன் பைபர் படகில் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றார். திரும்பிவரும் போது கடல் சீற்றத்தின் காரணமாக முகுந்தன், படகிலிருந்து தவறி கடலில் விழுந்து மூழ்கினார். உடன் இருந்தவர்கள் கடலில் குதித்து தேடிப்பார்த்தும் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை. கடலில் மூழ்கிய சிறுவனை இரண்டு நாட்களாக கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று அதிகாலை சித்திரைப்பேட்டை ராஜாப்பேட்டை கிராமங்களுக்கு இடையே முகுந்தனின் உடல் கரை ஒதுங்கியது. கடலுார் துறைமுகம் போலீசார் நேரில் சென்று பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடலில் மூழ்கி சிறுவன் இறந்தது, சித்திரைப்பேட்டை கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.