உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை

ரயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை

கடலுார்:குடியரசு தின விழாவை முன்னிட்டு, ரயில் நிலையம் மற்றும் அண்ணா விளையாட்டு மைதானத்தில் போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தினர்.குடியரசு தின விழாவை முன்னிட்டு, கடலுார் துறைமுக ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனர். ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மயிலப்பன் தலைமையில் ஏட்டு முருகன், போலீசார் சதீஷ், பாண்டியன், முருகன் ஆகியோர் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.இதேபோன்று, குடியரசு தின விழா கொடியேற்றம் நடைபெறும் கடலுார் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் சப் இன்ஸ்பெக்டர்கள் வேல்முருகன், மில்டன் ஆகியோர் தலைமையில் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.மேலும் பஸ் நிலையம், திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையம், கோவில்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களிலும் போலீசார் மோப்பநாய் மூலம் சோதனை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி