கீழமணக்குடி ஊராட்சியில் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்
பரங்கிப்பேட்டை, : பரங்கிப்பேட்டை அடுத்த கீழமணக்குடி ஊராட்சியில், மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் நேற்று பூத் கமிட்டி அமைப்பதற்கான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.ஒன்றிய அவைத் தலைவர் ரெங்கசாமி தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் சமயசங்கரி மோகன் வரவேற்றார்.மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆனந்தஜோதி சுதாகர், பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், பாண்டியன் எம்.எல்.ஏ., பங்கேற்று, பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.கூட்டத்தில், மாவட்ட விவசாய அணி தலைவர் தன கோவிந்தராஜன், ஊராட்சி தலைவர்கள் செல்லப்பன், மகேஷ்,நிர்வாகிகள் ராஜேந்திரன், தங்க தனபால், செழியன், மணிவண்ணன், கணேசமூர்த்தி, முருகுமணி, ராமமூர்த்தி, செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.கிளை செயலாளர் மோகன் நன்றி கூறினார்.