தெருநாய் கடித்து சிறுவன் படுகாயம்
நெய்வேலி: நெய்வேலியில் தெருநாய் கடித்ததால் பள்ளிச்சிறுவன் படுகாயமடைந்தார். நெய்வேலி ஆர்ச்கேட் எதிரே உள்ள சக்தி நகர் வடக்கு தெருவை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் கவின்ராஜ், 7; அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவன், நேற்று மன்தினம் மாலை 4 மணி அளவில் அவரது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக தெருநாய் ஒன்று கவின்ராஜை, இடது கை பகுதியில் 5 இடத்திலும், வலது கை பகுதியில் 2 இடத்திலும் கடித்து குதறியுள்ளது. காயமடைந்த சிறுவன், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நெய்வேலி டவுன்ஷிப், இந்திரா நகர் மற்றும் நெய்வேலியை சுற்றியுள்ள பகுதிகளில் சாலைகளில் திரியும் தெருநாய்களால், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் அச்சமடைந்து வருகின்றனர். வடக்குத்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் என்.எல்.சி., நகர நிர்வாகம் சாலையில் திரியும் தெருநாய்களை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கிடையில் சிறுவன் கவின்ராஜை தெருநாய் கடித்து குதறிய சம்பவம், சமூக வளைதளத்தில் வைரலாகி வருகின்றது.