மேலும் செய்திகள்
'மாஜி' முதல்வர் பிறந்த நாள் பொது மருத்துவ முகாம்
14-May-2025
கடலுார்: தமிழ்நாடு பிராமணர் சங்கம், கடலுார் மஞ்சக்குப்பம் கிளை சார்பில் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது.மாநில செயலாளர் திருமலை தலைமை தாங்கினார். கிளை பொதுச் செயலாளர் பரகால ராமானுஜம் வரவேற்றார். உறுப்பினர் கோதண்டராமன் முன்னிலை வகித்தார். இளைஞரணி செயலாளர் ரவிச்சந்திரன் பங்கேற்று 10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசு, கல்வி உபகரணங்கள் வழங்கி பாராட்டினார். அரிமா மாவட்ட தலைவர் வித்யாஸ்ரீ ரவிச்சந்திரன் வாழ்த்திப் பேசினார். மகளிரணி செயலாளர் ரம்யா நன்றி கூறினார்.
14-May-2025