உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பிராமணர் சங்க கூட்டம்

பிராமணர் சங்க கூட்டம்

கடலுார்; காட்டுமன்னார்கோவிலில் நடந்த தமிழ்நாடு பிராமணர் சங்க கூட்டத்தில் அனைவருக்கும் விசுவாவசு வருட புதிய பஞ்சாங்கம் வழங்கப்பட்டது. காட்டுமன்னார்கோவில் வட்ட தமிழ்நாடு பிராமணர் சங்க கூட்டம் தெற்கு வீதியில் நடந்தது. சங்க தலைவர் சீனிவாசநாராயணன் தலைமை தாங்கினார். நிர்வாகி வெங்கடாச்சாரி வரவேற்றார். வேதவிற்பன்னர்கள் ஸ்ரீவிஷ்னு சகஸ்ரநாம லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்தனர். இதனை தொடர்ந்து கோவில்களில் சங்க ஆன்மீக செயல்பாடு, சங்க சேவை செயல்பாடுகள், வளர்ச்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 'விசுவாவசு' வருட புதிய பஞ்சாங்கம் அனைவருக்கும் வழங்கப்பட்டு, பஞ்சாங்கத்தின் சிறப்புகள் குறித்து விளக்கி பேசினர். நிகழ்ச்சியில் கோபாலகிருஷ்ணன், தலைவர் சாமா, பாலாஜி, பாலு, சாமிநாதன், கண்ணன், ஸ்ரீவக்சவன், ராஜகோபாலன், வாசுதேவன், ஜனார்த்தனன், மூர்த்தி மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை