மேலும் செய்திகள்
தம்பதியை தாக்கியவர் மீது வழக்கு
27-Jul-2025
குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா நடந்தது. நெய்வேலி, ஆர்ச்கேட் ரோட்டரி சங்கம் சார்பில் நடந்த விழாவில், மருத்துவ அலுவலர் ரேவதி மணிபாலன் தலைமை தாங்கினார். ரோட்டரி உதவி ஆளுநர் முருகேசன் தாய்ப்பால் விழிப்புணர்வு குறித்த கையேடு வெளியிட, சங்க தலைவர் ராம்குமார் பெற்று கொண்டார். 60 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய பெட்டகங்கள் வழங்கப்பட்டன. செயலாளர் கலிய மூர்த்தி, திட்ட சேர்மன் சக்திவேல், முன்னாள் ஆளுநர் டேவிட், முன்னாள் தலைவர்கள் அழகுசெல்வம், அறிவழகன், செல்வமுத்துகுமரன், தமிழ்வேல், சுகாதார ஆய்வாளர் சுகன், செவிலியர்கள் வேம்பு, வடிவழகி, பணியாளர்கள் விஜயராகவன், மங்களலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
27-Jul-2025