மேலும் செய்திகள்
மங்கலம் கதிரவன் பள்ளி மாணவர்கள் அபாரம்
12-Oct-2025
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அடுத்த புலவனூர் மேல்குமாரமங்கலத்தை சேர்ந்த சிவரத்தினம் மகன் கதிரவன்,35; கொத்தனார். இவர் நேற்று காலை நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தை சேர்ந்த கலில்ரகுமான் புதியதாக கட்டி வரும் வீட்டுக்கு டைல்ஸ் பதிக்கும் வேலையில் ஈடுபட்டார். முதல் மாடியில் இருந்து இரும்பு டேப் மூலம் அளந்தபோது அருகில் சென்ற உயர்மின் அழுத்த கம்பிபட்டதால் கதிரவன் மீது மின்சாரம் பாய்ந்து, கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவர் வழியிலேயே இறந்துவிட்டார். கதிரவனுக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
12-Oct-2025