பி.எஸ்.என்.எல்., வெள்ளி விழா ஆண்டு
கடலுார்: பி.எஸ்.என்.எல்.,நிறுவனத்தின் 25வது ஆண்டு விழாவையொட்டி கடலுாரில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. கடலுாரில் நடந்த வெள்ளி விழா பேரணியை மாவட்ட எஸ்.பி.,ஜெயக்குமார், கொடியசைத்து துவக்கி வைத்தார். பி.எஸ்.என்.எல்., மாவட்ட பொது மேலாளர் பாலச்சந்திரன், டி.எஸ்.பி., ரூபன்குமார் முன்னிலை வகித்தனர். பேரணியில் பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள், ஊழியர்கள், ஓய்வுபெற்ற ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். கடலுார் கந்தசாமி நாயுடு கல்லுாரியில் கட்டுரைப் போட்டி, கடலுார் அரசு மருத்துவமனையில், ரத்த தானமுகாம் நடந்தது. தொடர்ந்து, கடலுார் பொது மேலாளர் அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடினர். துணை பொது மேலாளர்கள் முரளிதரன், ஜெயகிருஷ்ணன், உதவி பொது மேலாளர்கள் கீதா, மகேஷ்குமார், திருமுருகன், சுமா, வெங்க டேசன், ஜெயிலால், சுஜேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.