உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சில்வர் பீச்சில் குவிந்த ஆகாய தாமரை; பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டி புதைப்பு

சில்வர் பீச்சில் குவிந்த ஆகாய தாமரை; பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டி புதைப்பு

கடலுார் : கடலுார் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் டன் கணக்கில் குவிந்துள்ள ஆகாய தாமரை செடிகளை பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டி மண்ணில் புதைக்கும் பணி நடந்து வருகிறது.பெஞ்சல் புயல் காரணமாக கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், சாத்தனுார் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த தண்ணீர், தென்பெண்ணை ஆற்றின் வடிகால் பகுதியான கடலுார் வங்காள விரிகுடா கடலில் கலந்தது. இதேபோன்று, கெடிலம் ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடலுார் கடலில் கலந்தது.இந்த தண்ணீரில் அடித்துவரப்பட்ட ஆகாய தாமரை, கடலுார் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் கடற்கரையோரம் டன் கணக்கில் குவிந்துள்ளது. இதனால், துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், குவிந்து கிடக்கும் ஆகாய தாமரையால், பீச் பொலிவிழந்து காணப்பட்டது. இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இரண்டு பொக்லைன் இயந்திரங்கள் மூலம் கடற்கரையில் பள்ளம் தோண்டி, ஆகாய தாமரை செடிகளை மண்ணில் புதைக்கும் பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ