மேலும் செய்திகள்
அவ்வையார் விருது விண்ணப்பிக்கலாம்
25-Nov-2025
கடலுார்: சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடப்பாண்டில் உலக மகளிர் தினத்தன்று அவ்வையார் விருது வழங்கப்படுகிறது. கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு முதல்வரால் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, சான்று மற்றும் பொன்னாடை ஆகியவை வழங்கப்படுகிறது. இவ்விருது பெறுவதற்கு தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்ப விவரங்களை தமிழக அரசின் (http://awards.tn.gov.in) என்ற இணையதளத்தில் வரும், 31 ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இந்த விருதிற்கு தமிழகத்தை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் பெண்குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகள், சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழி தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிக்கை நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிகச்சிறந்து விளங்கும் மகளிராக இருத்தல் வேண்டும். தேசிய மற்றும் உலகளாவிய விருதுகளின் விவரம் (விருது பெற்றிருப்பின் அதன்விவரம், விருதின் பெயர், யாரிடமிருந்து பெற்றது, பெற்ற விவரம்) சேவை பற்றிய செய்முறை விளக்கம் புகைப்படங்கள், விரிவான அறிக்கை, சமூக சேவையாளரின் சமூக சேவை நிறுவனத்தின் மூலமாக பயனாளிகள் பயனடைந்த விவரம், சமூக பணியாளர் இருப்பிடத்தில் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திலிருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்பதற்கான சான்று ஆகியவை தேவை. விண்ணப்பதாரர் சமர்ப்பிக்கும் கருத்துருக்களில் பெண்கள் முன்னேற்றத்திற்கான சேவை புரிந்த விவரங்களை ஒரு பக்க அளவில் தமிழ் மற்றும் ஆங்கில வடிவில் புகைப்படங்களுடன் கூடிய கருத்துரு தயார் செய்து சமூகநல அலுவலகம் அரசு சேவை இல்ல வளாகம் நெல்லிக்குப்பம் மெயின்ரோடு கடலுார் என்ற விலாசத்தில் வரும் ஜனவரி, 2026ம் ஆண்டு ஜன.,10ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
25-Nov-2025