தொடர் மழையால் கன்றுகள் சாவு
புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் பகுதியில் தொடர் மழை காரணமாக இரண்டு கன்றுகுட்டிகள் இறந்தன.வாங்க கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த பகுதி காரணமாக தமிழக முழுதும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் வயல்கள் மற்றும் தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.இந்நிலையில் புதுச்சத்திரம் அடுத்த ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த கண்ணுசாமி மகன் தெய்வநாயகம், 45;வீட்டில் வளர்த்த எருமைக்கன்று, ஆண்டார்முள்ளிபள்ளத்தைச் சேர்ந்த பாலமுருகன் மனைவி, 44; வீட்டில் வளர்த்த பசுங்கன்று இறந்தன. தகவலறிந்த கால்நடைத்துறையினர் ஆய்வு செய்தனர்.