மேலும் செய்திகள்
விளையாட்டுத் திடல் இருக்கு... ஆனா... இல்ல...
19-Sep-2024
பெண்ணாடம் : நல்லுார் ஒன்றியம், பெண்ணாடம் அடுத்த பாசிக்குளத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் விளையாட்டுத் திடல் அமைக்கப்பட்டது. ஓரிரு மாதங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த விளையாட்டு திடல் நாளடைவில் போதிய பராமரிப்பின்றி உபகரணங்கள் பாழானது.இதனால் விளையாட்டுத் திடலை சிறுவர்கள், இளைஞர்கள் பயன்படுத்த முடியாமல் முட்புதர்கள் மண்டியுள்ளதால் கிராம சிறுவர்கள், இளைஞர்கள் விளையாடவும், உடற்பயிற்சி செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.எனவே, பாசிக்குளத்தில் பாழாகி வரும் விளையாட்டுத் திடலை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம், ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
19-Sep-2024