உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கார் டிரைவர் தற்கொலை

கார் டிரைவர் தற்கொலை

குறிஞ்சிப்பாடி: கார் டிரைவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்குறிஞ்சிப்பாடி உடையார் தெருவை சேர்ந்தவர் செல்வம் மகன், கார்த்தி, 37. கார் டிரைவர். இவருக்கு, 6 ஆண்டுகளுக்கு முன்பு லாவண்யா என்பவருடன் திருமணம் ஆகி, தர்ஷன், 5, சங்கமித்ரா, 2, என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கார்த்தி நிறைய கடன் பெற்று மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.நேற்று முன்தினம் லாவண்யா அருகில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று திரும்பிய போது, வீட்டில் உள்ள மின்விசிறியில் புடவையால் கார்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்த குறிஞ்சிப்பாடி போலீசார் சடலத்தை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி