உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இருதரப்பு மோதல் 10 பேர் மீது வழக்கு

இருதரப்பு மோதல் 10 பேர் மீது வழக்கு

குள்ளஞ்சாவடி : இருதரப்பு மோதலில், 10 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர் குள்ளஞ்சாவடி அடுத்த அணுக்கம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ், 27; இவருக்கும், வெங்கடம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ், 23; என்பவருக்கும் கோழி சண்டை தொடர்பான முன்விரோதம் உள்ளது. நேற்று முன்தினம் அணுக்கம்பட்டில் இருதரப்புக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டு, தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியே அளித்த புகாரின் பேரில், குள்ளஞ்சாவடி போலீசார், ஆகாஷ், வெங்கடேஷ், குமார், விக்னேஷ் உட்பட 10 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை