உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாலிபரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

வாலிபரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

விருத்தாசலம்; சம்பளம் தராத ஆத்திரத்தில் வேன் உரிமையாளரை தாக்கிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். விருத்தாசலம் அடுத்த டி.பவழங்குடியை சேர்ந்தவர் சதாசிவம் மகன் சிவமூர்த்தி, 22; இவரது டாடா ஏஸ் வேனில், வைக்கோல் ஏற்றும் வேலைக்கு அதே பகுதியை சேர்ந்த சகோதரர்கள் விக்னேஷ்குமார், தினேஷ்குமார் சென்றனர். வேன் பழுதானதால் ஒரு நாள் சம்பளம் தர முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இருவரும் சிவமூர்த்தி வீட்டிற்கு சென்று அவரை இரும்பு கம்பியால் தாக்கினர். தடுக்க வந்த அவரது தாயையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து சிவமூர்த்தி அளித்த புகாரின் பேரில், விக்னேஷ்குமார், தினேஷ்குமார் ஆகியோர் மீது கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ