மேலும் செய்திகள்
முன்விரோத தகராறு 2 பேர் மீது வழக்கு
14-Sep-2025
குள்ளஞ்சாவடி: சொத்து தகராறு காரணமாக இருதரப்பு மோதலில் 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர் குள்ளஞ்சாவடி அடுத்த தோப்புக்கொல்லை பகுதியை சேர்ந்தவர்கள் பாலு, 45; முருகன், 48; சகோதரர்களான இவர்களுக்கு நிலம் தொடர்பான முன்விரோதம் உள்ளது. இந்நிலையில், நிலத்தை வி.ஏ.ஓ., பார்வையிட்டு விசாரணை செய்த போது, இருதரப்பும் மோதிக் கொண்டனர். இதுகுறித்து இருதரப்பும் தனித்தனியே அளித்த புகாரின் பேரில், முருகன், அவரது மனைவி புஷ்பகலா, 43; பாலு ஆகியோர் மீது குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
14-Sep-2025