உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கொலை மிரட்டல் 4 பேர் மீது வழக்கு

கொலை மிரட்டல் 4 பேர் மீது வழக்கு

நடுவீரப்பட்டு:முன்விரோத தகராறில் கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். நடுவீரப்பட்டு அடுத்த சிலம்பிநாதன்பேட்டையை சேர்ந்தவர் மணிகண்டன்,50; இவருக்கு எஸ்.புதுக்குப்பத்தை சேர்ந்த கனகராஜ் என்பவருக்குமிடையே இடப்பிரச்னை தொடர்பாக முன்விரோதம் உள்ளது. வருவாய்த்துறை அதிகாரிகள் பிரச்னைக்குரிய இடத்தை அளவீடு செய்து கல் நட்டனர். இதனை கனகராஜ், இவரது மனைவி வித்யா, உறவினர்கள் ராதாகிருஷ்ணன், லலிதா ஆகிய 4 பேரும் அப்புறப்படுத்தினர். தட்டிக் கேட்ட மணிகண்டனுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். நடுவீரப்பட்டு போலீசார், கனகராஜ் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி