முன்விரோத தகராறு 4 பேர் மீது வழக்கு
குறிஞ்சிப்பாடி: வாலிபரை தாக்கிய, 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். குறிஞ்சிப்பாடி அடுத்த வெங்கடாம்பேட்டையைச் சேர்ந்தவர் புஷ்பகுமார், 24; இவர் நேற்று முன்தினம் வயலை உழுது முடித்து டிராக்டரில் வீடு திரும்பினார். அப்போது முன்விரோதம் காரணமாக அவரை வழிமறித்த அதே பகுதியை சேர்ந்த சிலம்பரசன் உள்ளிட்ட, 4 பேர் அவரை கீழே தள்ளி, கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த புஷ்பகுமார் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில் சாமிதுரை, சிலம்பரசன், கோகுல், தினேஷ் ஆகியோர் மீது குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.