மேலும் செய்திகள்
இருதரப்பு மோதல் 5 பேர் மீது வழக்கு
06-Jul-2025
விருத்தாசலம்: முன்விரோத தகராறில் தாக்கி கொண்ட, இருதரப்பை சேர்ந்த 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். விருத்தாசலம், ராமச்சந்திரன்பேட்டையை சேர்ந்தவர் ராகவன் மனைவி மஞ்சம்மாள், 44. அதே பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி என்பவர் தனது காரை வெளிய நிறுத்துவது வழக்கம். கார் நிறுத்துவது சம்பந்தமாக மஞ்சம்மாள், தங்கமணி இடையை முன்விரோதம் உள்ளது. இந்நிலையில், கடந்த 8ம் தேதி மஞ்சம்மாள் மகள் ஓட்டிச் சென்ற சைக்கிள், வீட்டின் அருகில் நிறுத்தி வைத்திருந்த தங்கமணி கார் மீது மோதியது. இதனால், இருதரப்புக்கும் மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த இருதரப்பினரும் ஒருவரை தாக்கி கொண்டனர். இதுதரப்பு புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார், மஞ்சம்மாள், கணவர் ராகவன், தங்கமணி, மனைவி விஜயா உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
06-Jul-2025