உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கொலை மிரட்டல் 7 பேர் மீது வழக்கு 

கொலை மிரட்டல் 7 பேர் மீது வழக்கு 

நடுவீரப்பட்டு: நிலப்பிரச்னையில் தம்பதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.நடுவீரப்பட்டு அடுத்த வெள்ளக்கரை மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் நாகப்பன்,82; அதே பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இருவருக்கும் நிலப்பிரச்னை உள்ளது. பிரச்னைக்குரிய இடத்தில் கிருஷ்ணமூர்த்தி கழிகளை கொட்டி வைத்திருந்தார். இதை நாகப்பன், அவரது மனைவி முத்துலட்சுமி ஆகிய இருவரும் தட்டி கேட்டனர். இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி, இவரது மனைவி கிரிஜா, மகள் யோகலட்சுமி, மகன் மனோஜீவன், கிருஷ்ணன், அவரது மனைவி கோதை, உறவினர் மல்லிகா ஆகிய 7 பேரும் சேர்ந்து நாகப்பன், முத்துலட்சுமியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார், கிருஷ்ணமூர்த்தி உட்பட 7 பேர் மீது வழக்கு விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை