இருதரப்பு மோதல் 8 பேர் மீது வழக்கு
வடலுார் : இருதரப்பு மோதல் தொடர்பாக, 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர் குறிஞ்சிப்பாடி அடுத்த அரங்கமங்கலத்தைச் சேர்ந்தவர்கள் பரமவேல், 53; பெருமாள். இருவருக்கும் முன்விரோதம் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர். இதில் காயமடைந்த பிரபாகரன், பெருமாள் ஆகியோர் குறிஞ்சிப்பாடி, கடலுார் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இருதரப்பினரும் தனித்தனியே அளித்த புகாரின் பேரில், ராகுல், மூர்த்தி, பெருமாள், ராஜலிங்கம், பரமவேல் உட்பட 8 பேர் மீது வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.