உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முன்விரோத தகராறு ஒருவர் மீது வழக்கு

முன்விரோத தகராறு ஒருவர் மீது வழக்கு

திட்டக்குடி: சமையல் காண்ட்ராக்டரை தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். திட்டக்குடி அடுத்த கூடலுார், மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் முனியப்பா, 48; சமையல் காண்ட்ராக்டர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செந்தில் என்பவருக்கும் சமையல் வேலைக்கு ஆட்களை அழைத்து செல்வது தொடர்பாக முன்விரோதம் உள்ளது. கடந்த 31ம் தேதி இரு வரும் அதே பகுதியில் மது அருந்தினர். அப்போது, வேலைக்கு அழைத்துச் செல்வது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த செல்தில், முனியப்பாவை திட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து முனியப்பா மனைவி மாரியம்மாள் அளித்த புகாரின்பேரில், ஆவினங்குடி போலீசார், செந்தில் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ