உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெற்றோரை தாக்கிய மகன் மீது வழக்கு

பெற்றோரை தாக்கிய மகன் மீது வழக்கு

கடலுார்: கடலுார் முதுநகர் அருகே தனியாக வீடு கட்டித்தரச்சொல்லி, தாய், தந்தையை தாக்கிய மகன் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.கடலுார் முதுநகர் அடுத்த வழிசோதனை பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்,58, விவசாயி. இவருக்கு ராஜேஷ், ஹரிஹரன் என இரண்டு மகன்கள் உள்ளனர். இரண்டு பேருக்கும் திருமணமாகிவிட்டது. அனைவரும் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். ஜன.2ம் தேதி, மதுபோதையில் வீட்டிற்கு வந்த ஹரிஹரன் தனக்கு தனியாக வீடு கட்டித்தரும்படி தந்தை ராஜேந்திரன் மற்றும் தாய் கலைச்செல்வியை திட்டி தாக்கி கொலைமிரட்டல் விடுத்தார். வீட்டிலிருந்து ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான வீட்டுஉபயோக பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தினார். புகாரின் பேரில், கடலுார் முதுநகர் போலீசார் ஹரிஹரன் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை