உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முன்விரோத தாக்குதல் 4 பேர் மீது வழக்கு பதிவு

முன்விரோத தாக்குதல் 4 பேர் மீது வழக்கு பதிவு

விருத்தாசலம்: மாமியாரை தாக்கிய மருமகள் உள்ளிட்ட நால்வர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். விருத்தாசலம் நாச்சியார்பேட்டையை சேர்ந்தவர் தினேஷ், 30; இவரது மனைவி கங்கா, 27; இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த ஓராண்டிற்கு முன் விவகாரத்து கோரிய வழக்கு , விருத்தாலம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனால், கங்கா கடந்த ஓராண்டாக சென்னை கூடுவாஞ்சேரியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 9ம் தேதி வழக்கு விசாரணைக்காக கங்கா, தந்தை நாகரத்தினம், 57; ஆதரவாளர்கள் அருண், 34; குயிலி, 30. ஆகியோர் விருத்தாசலம் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். அப்போது, தினேஷ் தாயார் ராஜசெல்வியை, கங்கா, தந்தை நாகரத்தினம் உள்ளிட்ட நால்வம் அசிங்கமாக திட்டி தாங்கினர். இதுசம்பந்தமாக, ராஜசெல்வி கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் கங்கா, தந்தை ராஜரத்தினம் உள்ளிட்ட நால்வர் மீது வழக்குப் பதிந்து, விசாரித்து வரு கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !