மேலும் செய்திகள்
கஞ்சா விற்ற வாலிபர் கைது
10-Dec-2024
குள்ளஞ்சாவடி : சொத்து பிரச்னை காரணமாக பெண் தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.குள்ளஞ்சாவடி எடுத்த கட்டியங்குப்பம், ரோட்டு தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் மனைவி செல்வி, 40. இவரது கணவர், மகள் சில ஆண்டுகளுக்கு முன் இறந்தனர். இந்த நிலையில் சுரேஷ்குமார் உறவினர்களுக்கும், செல்விக்கும் இடையே பாகப்பிரிவினை தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது.இந்த நிலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில், சுரேஷ்குமார் உறவினர்கள் செல்வியை ஆபாசமாக திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து செல்வி வீட்டில் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்று மீட்கப்பட்டு, கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.புகாரின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட, புஷ்பலதா, முருகவேல், பாலசுப்பிரமணியன், ரவி, தங்கம் ஆகிய 5 பேர் மீது குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
10-Dec-2024