மேலும் செய்திகள்
பஸ்சிற்கு காத்திருந்தவரிடம் மொபைல் போன் பறிப்பு
19-Jan-2025
புதுச்சத்திரம்; புதுச்சத்திரம் அருகே ட்ரான்ஸ்பார்மரில் இருந்த காப்பர் வயரை திருடிய, மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சத்திரம் அடுத்த ஆதிநாராயணபுரம் ஊராட்சிக்குட்பட்ட தானூர் பகுதியில் டிரான்ஸ்பார்மர் உள்ளது.இந்நிலையில் நேற்று இந்த டிரான்ஸ்பார்மரில் இருந்த காப்பர் வயர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். திருடு போன காப்பர் வயரின் மதிப்பு சுமார் 65 ஆயிரம் ரூபாயாகும்.இது குறித்து ஆலப்பாக்கம் துணை மின் நிலைய உதவி மின் பொறியாளர் ராமலிங்கம் கொடுத்த புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, காப்பர் வயரை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
19-Jan-2025