சி.பி.எஸ்.இ., தேர்வு துவக்கம்
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் 10ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., தேர்வை 1,446 மாணவ, மாணவிகள் எழுதி னர். கடலுார் மாவட்டத்தில் சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தின் கீழ் 10ம் வகுப்பு தேர்வு நேற்று துவங்கியது. தேர்வை 38 தனியார் பள்ளிகளில் பயிலும் 1,446 மாணவ, மாணவிகள் எழுதினர். இதற்காக 11 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இன்று துவங்க உள்ள பிளஸ் 2 தேர்வை 1,434, மாணவ, மாணவிகள் எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.