உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / என்.எல்.சி.,யில் துாய்மை பணி சேர்மன் துவக்கி வைப்பு

என்.எல்.சி.,யில் துாய்மை பணி சேர்மன் துவக்கி வைப்பு

நெய்வேலி : நெய்வேலி என்.எல்.சி., இந்தியா நிறுவனம் சார்பில், நெய்வேலி மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகில் துாய்மையே சேவை திட்டத்தின் கீழ் துாய்மை பணி நடந்தது. என்.எல்.சி., இந்தியா நிறுவன சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி, துாய்மை பணியை துவக்கி வைத்தார். விழாவில், என்.எல்.சி., இயக்குநர்கள் டாக்டர் சுரேஷ் சந்திர சுமன், சமீர் ஸ்வரூப், வெங்கடாசலம், என்.எல்.சி., விஜிலென்ஸ் துறையின் முதன்மை கண்காணிப்பு அதிகாரி அப்பாக்கண்ணு கோவிந்தராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். நெய்வேலி நகரில் பல்வேறு இடங்களில் பல பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், சாரண மாணவர்கள், செஞ்சிலுவைச் சங்கத்தினர், மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் அடங்கிய குழுவினர் ஒரே நேரத்தில் துாய்மை பணியில் ஈடுபட்டனர். என்.எல்.சி., நிறுவனத்தில் கடந்த 17ம் தேதி துவங்கிய துாய்மைப் பணிகள் வரும் 2ம் தேதி வரை நடக்கிறது. விழாவில், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளைப் பிரித்து அப்புறப்படுத்துவது பற்றியும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான கையேடுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ