மேலும் செய்திகள்
மாரியம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா கோலாகலம்
07-Aug-2025
திட்டக்குடி: திட்டக்குடி அருகே மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திட்டக்குடி அடுத்த தொ.செங்கமேடு கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த 3ம்தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினசரி காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், இரவு அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்வான நேற்று காலை 10:00 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் முத்துமாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகளின் வழியே சென்று, கோவிலை வந்தடைந்னர். இன்று (15ம்தேதி) மஞ்சள் நீர் உற்சவத்துடன் ஆடித்திருவிழா நிறைவடைகிறது.
07-Aug-2025