முத்து மாரியம்மன் கோவிலில் அன்னதானம்
கடலுார் : கடலுார் வன்னியர்பாளையம் முத்துமாரியம்மன் கோவிலில் மண்டாலபிேஷகத்தில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். கடலுார் வன்னியர்பாளையம் முத்துமாரியம்மன் கோவிலில் மண்டலாபிஷேகத்தையொட்டி சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாக்குழு தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் செயலாளர் கல்யாணமூர்த்தி, பொருளாளர்கள் ராமலிங்கம், அன்பழகன் மற்றும் நிர்வாகிகள், பக்தர்கள் பங்கேற்றனர். கடலுார் கோவன்ஸ் நுரையீல் சிகிச்சை மைய டாக்டர் கலைக்கோவன் அன்னதானம் வழங்கினார்.