மேலும் செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கு வட்டார அளவிலான செஸ் போட்டி
17-Jul-2025
சிதம்பரம்: சிதம்பரம் அடுத்துள்ள பி.முட்லுார் ஜவகர் மெட்ரிக் பள்ளியில் சதுரங்க போட்டி நடந்தது. சிதம்பரம் அடுத்துள்ள பி முட்லூர் ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பரங்கிப்பேட்டை குறுவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையே சதுரங்க போட்டி நடந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து, சுமார் 260 மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடினர். நிகழ்ச்சிக்கு ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிறுவனர் மதியழகன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக, அரசு மாதிரி பள்ளியின் தலைமை ஆசிரியர் வேல்முருகன் பங்கேற்று, போட்டியை துவங்கி வைத்தார். பள்ளி முதல்வர் சுமதி வாழ்த்துரை வழங்கினர். உடற்கல்வி இயக்குநர்கள் வெற்றிவேந்தன், தமிழ்மணி, குருராஜேஸ்வரன் ஜவகர் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் கலைவாணன், சதீஷ்குமார் மற்றும் மதுபாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளி துணை முதல்வர் தசரதன் நன்றி கூறினார்.
17-Jul-2025