முதல்வர் வருகை எதிரொலி புதுப்பொலிவு பெறும் சிதம்பரம்
சிதம்பரம் : தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகையால் சிதம்பரத்தில் முன்னேற்பாடுகள் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.தமிழக முதல்வர் ஸ்டாலின் சிதம்பரம் நகரத்திற்கு வரும் 14 ம் தேதி இரவு வருகை தர உள்ளார். மறுநாள் 15ம் தேதி காலை சிதம்பரம் அரசு பெண்கள் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழாவையொட்டி, காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து, மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார்.பின், சிதம்பரம்-புவனகிரி பைபாஸ் சாலையில் கட்டப்பட்டுள்ள, முன்னாள் எம்.பி., இளையபெருமாள் நுாற்றாண்டு கட்டடத்தில் அவரது சிலையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் துவக்க விழாவில் பங்கேற்கிறார்.முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி, சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. குறிப்பாக, சாலைகளில் வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. முதல்வர் வருகையால், சிதம்பரம் நகரம் புதுப்பொலிவு பெற்று வருகிறது. ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் சாலைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.