உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிதம்பரம் கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

சிதம்பரம் கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

சிதம்பரம்: சிதம்பரம் கஞ்சா வியாபாரியை, குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். சிதம்பரம், அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார், கடந்த நவ., 26ம் தேதி, ரோந்து பணியில் ஈடுபட்டனர்.மாரியப்பன் நகர் ரயில்வே தண்டவாளம் அருகே நின்று கொண்டிருந்த காரை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்த போது, 20 கிலோ கஞ்சா இருப்பதைக் கண்டறிந்தனர். இதுகுறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப் பதிந்து சிதம்பரத்தைச் சேர்ந்த ஒடப்பு சிவா (எ) சிவக்குமார்,28; தமிழரசன் உட்பட 15 பேரை கைது செய்தனர். இதில், சிவக்குமார் மீது அண்ணாமலை நகர், சிதம்பரம் டவுன் போலீஸ் நிலையங்களில் கஞ்சா, திருட்டு உட்பட 8 வழக்குகள் உள்ளன. இவரின் குற்றச் செயல்களை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி.,ஜெயக்குமார் பரிந்துரையை ஏற்று, சிவக்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில், அதற்கான உத்தரவு நகல் கடலுார் மத்திய சிறையில் உள்ள சிவக்குமாரிடம் போலீசார் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை