உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முதல்வர் கோப்பை போட்டி விண்ணப்பிக்க அழைப்பு

முதல்வர் கோப்பை போட்டி விண்ணப்பிக்க அழைப்பு

கடலுார்; முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியுள்ளார். அவரது செய்திக் குறிப்பு: இந்த ஆண்டு (2025) முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் அனைத்து மாவட்ட அளவில் வரும் ஆக., மற்றும் செப்., மாதத்தில் நடக்கிறது. பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் என ஐந்து பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம். மாவட்ட அளவில் 25 விளையாட்டுப் போட்டிகளும், மண்டல அளவில் 7 வகை விளையாட்டுப் போட்டிகளும், மாநில அளவில் 37 வகை விளையாட்டுப் போட்டிகளும் மொத்தம் 83.37 கோடி ரூபாய் மதிப்பில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் https://cmtrophy.sdat.in/ https://sdat.tn.gov.inஎன்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பங்கேற்கலாம். முன்பதிவு செய்ய கடைசி நாள் வரும் 16ம் தேதி மாலை 6.00 மணி ஆகும். தாங்களாகவோ, தங்கள் பள்ளி, கல்லுாரி மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை