முதல்வர் கோப்பை மண்டல போட்டிகள் இன்று துவக்கம்
கடலுார்: முதல்வர் கோப்பைக்கான மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இன்று துவங்குகிறது என, கலெக்டர சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியுள்ளார். இதுகுறித்து அவரது செய்திக்குறிப்பு: 2025ம் ஆண்டிற்கான முதல்வர் கோப்பைக்கான மண்டல அளவிலான விளையாட்டுப்போட்டிகள் இன்று (2ம் தேதி) துவங்கி, வரும் 11ம் தேதி வரை நடக்கிறது. அதன்படி, பள்ளிப்பிரிவில் மாணவர்களுக்கான பளுதுாக்குதல் இன்றும், மாணவிகளுக்கான பளுதுாக்குதல் போட்டி நாளை 3ம் தேதி வேலுார் சத்துவாச்சேரி பளுதுாக்கும் மையத்தில் நடக்கிறது. மாணவிகளுக்கான குத்துச்சண்டை, டென்னிஸ், ஜுடோ போட்டிகள் 4ம் தேதியும், மாணவர்களுக்கான குத்துச்சண்டை, டென்னிஸ், ஜுடோ 6ம் தேதியும் கிருஷ்ணகிரி விளையாட்டு அரங்கில் நடக்கிறது. மாணவ, மாணவிகளுக்கான ரோடு சைக்கிளிங் போட்டி 7ம் தேதியும், வாள் சண்டை போட்டி 8ம் தேதியும் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது. மாணவர்களுக்கான பீச் வாலிபால் போட்டி 10ம் தேதியும், மாணவிகளுக்கான பீச் வாலிபால் போட்டி 11ம் தேதியும் கடலுார் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் நடக்கிறது. கல்லுாரிப்பிரிவில் மாணவிகளுக்கான குத்துச்சண்டை, ஜுடோ, டென்னிஸ் போட்டிகள் வரும் 4ம் தேதியும், மாணவர்களுக்கான குத்துச்சண்டை, ஜுடோ, டென்னிஸ் போட்டிகள் 6ம் தேதியும் கிருஷ்ணகிரி விளையாட்டு அரங்கில் நடக்கிறது. மாணவிகளுக்கான பளுதுாக்குதல் நாளை 3ம் தேதியும், மாணவர்களுக்கான பளுதுாக்குதல் 4ம் தேதியும் வேலுார் தத்துவாச்சேரி பளுதுாக்கும் மையத்தில் நடக்கிறது. மாணவ, மாணவியகளுக்கான ரோடு சைக்கிளிங் போட்டி 8ம் தேதியும், வாள் சண்டை போட்டி 9ம் தேதியும் , திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது. மாணவர்களுக்கான பீச் வாலிபால் போட்டி 10ம் தேதியும், மாணவிகளுக்கான பீச் வாலிபால் போட்டி 11ம் தேதியும் கடலுார் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் நடக்கிறது. முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பதிவு செய்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் போட்டிகள் நடக்கும் இடத்தில் காலை 7:00 மணிக்கு, உரிய ஆவணங்களுடன் பங்கேற்க வேண்டும்.