உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கால்நடை வளர்ப்போருக்கு பேரூராட்சி எச்சரிக்கை

கால்நடை வளர்ப்போருக்கு பேரூராட்சி எச்சரிக்கை

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் சாலைகளில் மாடுகளை விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காட்டுமன்னார்கோவில் சாலையில் மாடுகள், பன்றி சுற்றித் திரிவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தனர்.அதன்பேரில், பேரூராட்சி சார்பில், காட்டுமன்னார்கோவில் கடைவீதி மற்றும் முக்கிய தெருக்களில் ஒலிபெருக்கி மூலம் மாடு, பன்றிகள் வளர்ப்போருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதாவது, சாலையில் மாடுகள் சுற்றித் திரிந்தால் காவல்துறை சார்பில் மாட்டை பிடித்து, கோ சாலையில் அடைக்கப்படும் எனவும், மாடுகளால் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும் விபத்துக்கான நஷ்ட ஈடு தொகை மாட்டின் உரிமையாளர்களே வழங்க வேண்டும் என எச்சரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை