உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் முன்னேற்பாடு பணி ஆய்வு கூட்டம்

மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் முன்னேற்பாடு பணி ஆய்வு கூட்டம்

கடலுார் : கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நெய்வேலி தொகுதியில் நடக்க இருக்கும் மூன்றாம் கட்ட 'மக்களுடன் முதல்வர்' சிறப்பு முகாம் குறித்து ஆய்வுக் கூட்டம் நடந்தது.நெய்வேலி சட்டசபை தொகுதியில் நாளை 8 மற்றும் 9 ஆகிய இரு தேதிகளில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடக்கிறது. இதன் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது.கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., ராஜசேகரன், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் தங்கமணி மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் அலுவலர்கள் பங்கேற்றனர். கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறுகையில், 'கடலுார் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்டம் மூன்றாம் கட்டமாக நெய்வேலி தொகுதியில் ஆதிதிராவிடர்கள் அதிகம் வசிக்கும் ஊராட்சி பகுதிகளில் நடக்கிறது. மாவட்டத்தில் சட்ட மன்றத் தொகுதிக்கு 10 சிறப்பு முகாம் வீதம் 90 சிறப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டது. இதில் திட்டக்குடியில் 10, கடலுார் 5 முகாம், குறிஞ்சிப்பாடி 5 முகாம் என 3 சட்டமன்ற தொகுதியில் 20 முகாம் நடத்தப்பட்டுள்ளது. மூன்றாம் கட்டமாக 8 மற்றும் 9ம் தேதிகளில் நெய்வேலி தொகுதியில் 10 முகாம் நடக்கிறது. முகாமில் பொதுமக்களிடம் இருந்து வருவாய், ஊரக வளர்ச்சி, காவல் உள்ளிட்ட 23 துறை சார்ந்த கோரிக்கை மனுக்களை பெற்று, சம்மந்தப்பட்ட துறையில் பரிசீலனை செய்து தகுதி உடைய மனுக்கள் மீது தீர்வு வழங்கப்படும்' என்றார். 8ம் தேதி பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்தில் காடாம்புலியூர் கண்ணுசாமி மேல்நிலைப் பள்ளி, விசூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, காட்டுக்கூடலுார் அரசு மேல்நிலைப் பள்ளி, திருவாமூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய 4 இடங்களிலும், 9ம் தேதி குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் பெருமாத்துார், இந்திரா நகர், பொன்னங்குப்பம், தென்குத்து, பாச்சிராப்பாளையம், புலியூர் ஆகிய 6 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளிலும் முகாம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை