உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கோடை வெப்பத்தை சமாளிக்க கலெக்டர்... டிப்ஸ்! அதிக வெப்பம் நிலவும் என எச்சரிக்கை

கோடை வெப்பத்தை சமாளிக்க கலெக்டர்... டிப்ஸ்! அதிக வெப்பம் நிலவும் என எச்சரிக்கை

கடலுார்; கோடை வெயில் பாதிப்புக்களை சமாளிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆலோசனை வழங்கியுள்ளார். கடலுார் மாவட்டத்தில் வரும் நாட்களில் கோடை வெயில் வழக்கத்தைவிட அதிகரித்து அதிக வெப்பநிலை நிலவ கூடும் என்பதால், பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி தற்காப்பு வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது.வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளிலிருந்து தற்காத்து கொள்ள வேண்டியது அவசியம்.வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள நண்பகல் 12:00 மணி முதல் மாலை 3 மணிவரை அவசிய தேவைகளின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.தாகம் எடுக்காவிட்டாலும் கூட போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். பயணத்தின் போது குடிநீரை எடுத்துச் செல்லவேண்டும். ஒ.ஆர்.எஸ்., எலுமிச்சை ஜுஸ், இளநீர், வீட்டில் தயாரித்த மோர், ெலஸ்ஸி, நீர் ஆகாரம் மற்றும் பழச்சாறுகள் பருகி நீரிழப்பைத் தவிர்க்க வேண்டும். பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ணவேண்டும்.முடிந்த வரை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்க வேண்டும்.மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். மயக்கம் அல்லது உடல் நலக்குறைவினை உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். குழந்தைகளை வாகனங்களில் தனியே அமர்த்திவிட்டு வெளியே செல்ல கூடாது. பருக இளநீர் போன்ற திரவங்களை கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்படும் வெப்பம் தொடர்பான நோய்களை எவ்வாறு கண்டறிய வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளின் சீறுநீரை சோதித்துப் பார்க்கவும், மஞ்சள் நிறமுள்ள சிறுநீர் நீரிழப்பை குறிக்கலாம்.தனியே வசிக்கும் முதியவர்களின் உடல் நிலையை தினமும் இருமுறை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். கால்நடைகளை நிழல் தரும் கூரை பகுதியில் கட்ட வேண்டும். கால்நடைகளுக்கு தீவனங்களை வெட்ட வெளியில் போட வேண்டாம். பறவைகளுக்கு போதுமான நிழற்கூரைகள் அமைத்து போதிய நீர் கொடுக்க வேண்டும். செல்லப்பிராணிகளை வெயில் காலங்களில் வாகனங்களில் தனியே விட்டுச் செல்லக் கூடாது. பருவநிலை மாற்றங்களினால் இந்தாண்டு கோடை வெயில் துவக்கத்திலேயே வெப்பம் அதிகமாக உள்ளது. இதனால் மாடி வீடுகள், கூரை வீடுகளில் மின் ஒயர்கள் உருகி சார்ட் சர்க்யூட் ஏற்பட்டு, அதில் ஏற்படும் தீப்பொறியினால் வீடுகள் எளிதில் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது. மாடி வீடுகளில் மேல் கூரையில் ஏற்படும் அதிக வெப்பத்தினால் வீட்டின் உள்ளே மேல்புறம் உள்ள இரும்புகள் சூடாகி மின்விசிறி, டியூப்லைட் கழன்று கீழே விழும் தன்மையை பெறுகின்றன. எனவே, கோடை முடியும் வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விலை உயர்ந்தபொருட்கள், நில ஆவணங்கள், சான்றிதழ்களை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம்.கேஸ் சிலிண்டர்களை இரவில் கழற்றி வைப்பது நல்லது. விறகு அடுப்புகளை பன்படுத்திய பிறகு தண்ணீர் ஊற்றி அனைத்துவிட வேண்டும். மண்ணெண்ணெய் விளக்குகளை கவனமாக கையாள வேண்டும் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை