மேலும் செய்திகள்
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் துவக்கம்
10-Jan-2025
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நேற்று துவங்கியது.கடலுார் பீச் ரோடு சரவணபவ கூட்டுறவு பண்டகசாலை வளாகத்தில் நடந்த விழாவிற்கு, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி துவக்கி வைத்தார். மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதி வாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். இதையடுத்து மாவட்டத்தில் உள்ள 7,78,296 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி துவங்கியது. அப்போது, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் கோமதி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ராஜூ, துணைப் பதிவாளர் ரங்கநாதன், நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் தங்க பிரபாகரன், தி.மு.க., மாநகர செயலாளர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். சரவண பவ கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை செயலாளர் சந்திரசேகர் நன்றி கூறினார்.
10-Jan-2025