உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கலெக்டர் அலுவலக ஊழியர் படுகாயம்

கலெக்டர் அலுவலக ஊழியர் படுகாயம்

குள்ளஞ்சாவடி : கலெக்டர் அலுவலக ஊழியர் சாலை விபத்தில் படுகாயமடைந்தார்புவனகிரி தாலுகா, மஞ்சக்கொல்லை, வள்ளலார் நகரை சேர்ந்தவர், கந்தவேல் மகன், வெற்றிவேல் முருகன், 40. கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பதிவுத்துறை எழுத்தராக வேலை செய்து வருபவர். இவர் நேற்று முன்தினம் குள்ளஞ்சாவடி பகுதியில் உள்ள தனது நண்பரை பார்த்து விட்டு, குள்ளஞ்சாவடி சந்திப்பு அருகே சாலையை கடந்து நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி வெற்றிவேல் மீது மோதியது. அதில் படுகாயமடைந்த வெற்றிவேல் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை