வாசகன் ஆலோசனை மையத்தில் கல்லுாரி சேர்க்கை முகாம்
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் ஸ்ரீவாசகன் உயர்கல்வி ஆலோசனை மையம் சார்பில் கல்லுாரி சேர்க்கை முகாம் நடந்தது.அ.தி.மு.க., இலக்கிய அணி மாவட்ட செயலர் ரமேஷ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித் தொகை வழங்கினார். நிர்வாக இயக்குனர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார்.இணை இயக்குனர் மணிவேல், துணை இயக்குனர் ரேகா தமிழ்ச்செல்வன், கல்வி ஆலோசகர்கள் பேராசிரியர்கள் சூர்யபிரகாஷ், ராஜசேகரன், ஆகியோர் மாணவர்களுக்கு உயர்கல்வி கல்லுாரி சேர்க்கை குறித்து ஆலோசனை வழங்கினர்.இது குறித்து நிர்வாக இயக்குனர் தமிழ்ச்செல்வன் கூறுகையில், 'ஸ்ரீவாசகன் உயர்கல்வி ஆலோசனை மையம் மூலம் தமிழக அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் பல்வேறு முன்னணி கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு சேர்க்கை பெற்றுத் தருகிறோம்.பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு 10,000 ரூபாய் உதவித் தொகை 3 ஆண்டுகளுக்கு வழங்குகிறோம். முகாம் அலுவலகங்கள் விருத்தாசலம், திட்டக்குடி, நெய்வேலி இந்திரா நகர் ஆர்ச் கேட் பகுதிகளில் உள்ளது. கிராமபுற மாணவர்கள் நேரில் ஆலோசனைகளை பெற்று பயனடையலாம்.' என்றார்.