கல்லுாரி பேராசிரியர்கள் வாயிற் முழக்க போராட்டம்
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரியில், மத்திய அரசை கண்டித்து, அரசு கல்லுாரி ஆசிரியர் கழகம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி வாயிற் முழக்க போராட்டம் நடந்தது.போராட்டத்திற்கு, மண்டலத் தலைவர் மகேசன் தலைமை தாங்கினார். கிளை தலைவர் சுந்தரச்செல்வன், செயலர் முருகேசன், பொருளாளர் வேல்விழி, துணை தலைவர் ெஹலன் ரூத் ஜாய்ஸ், கருணாநிதி, பிரதீப் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.