உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஏரியில் மூழ்கி கல்லுாரி மாணவர் பலி

ஏரியில் மூழ்கி கல்லுாரி மாணவர் பலி

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அருகே கல்லுாரி மாணவர் ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்தார். ஸ்ரீமுஷ்ணம் அடுத்த சேல்விழியை சேர்ந்தவர் தெய்வநாதன், 48; விவசாய கூலி தொழிலாளி. இவரது மகன் தீபக்ராஜ், 22; தனியார் கல்லுாரியில் பி.இ., நான்காம் ஆண்டு படித்து வந்தார். இவரும், இவரது நண்பர்கள் இருவரும் சேர்ந்து சேல்விழி கிராமத்தில் உள்ள ஏரியில் தங்களது பைக்குகளை கழுவ சென்றனர். நண்பர்கள் இருவரும் அவர்களின் பைக்குகளை கழுவிக்கொண்டிருந்தபோது ஏரியில் குளித்துக்கொண்டிருந்த தீபக்ராஜ் எதிர்பாராத விதமாக மூழ்கினார். இதனைக்கண்ட நண்பர்கள் கூச்சலிட்டதை கேட்டு வந்த கிராம மக்கள், தீபக்ராஜை ஏரியில் இருந்து மீட்டு அருகில் உள்ள, ஸ்ரீநெடுஞ்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனனர். டாக்டர்கள் பரிசோதனையில், அவர் இறந்தது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி