உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குப்பை தரம் பிரிக்கும் பணி; கமிஷனர் ஆய்வு

குப்பை தரம் பிரிக்கும் பணி; கமிஷனர் ஆய்வு

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பத்தில் குப்பை தரம் பிரிக்கும் பணியை கமிஷனர் ஆய்வு செய்தார்.தமிழகம் முழுவதும் நகராட்சி கமிஷனர் காலை 6:00 மணிக்கே பணிக்கு வந்து துாய்மை பணியாளர்களுக்கு ஒதுக்கப்படும் பணியை ஆய்வு செய்ய வேண்டும். அதேப் போல் துாய்மை பணியாளர்கள் முறையாக பணி செய்கிறார்களா என ஆய்வு செய்து தினமும் போட்டோவுடன் அறிக்கை அனுப்ப வேண்டுமென அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி, நெல்லிக்குப்பம் நகராட்சி கமிஷ னர் கிருஷ்ணராஜன் நேற்று காலை தூய்மை பணியாளர்கள் குப்பையை முறையாக தரம் பிரித்து வாங்குகிறார்களா என ஆய்வு செய்தார். மக்கும், மக்காத குப்பையை தரம் பிரித்து வாங்க அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !