உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நகராட்சி வரி செலுத்த கமிஷனர் வேண்டுகோள்

நகராட்சி வரி செலுத்த கமிஷனர் வேண்டுகோள்

விருத்தாசலம்: விருத்தாசலம் நகராட்சி கமிஷனர் பானுமதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள், தாங்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, காலிமனை வரி, நகராட்சிக்கு சொந்தமான கடை வாடகை நிலுவை மற்றும் நடப்பு நிலுவை தொகையினை வரும் 15ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.வரி செலுத்தவர்கள் பெயர் பட்டியல், அந்ததந்த வார்டுகளில் பொதுஇடங்களில் பெயர் பலகை வைக்கப்படும். எனவே, நிலுவை தொகையினை விரைந்து செலுத்தி, பெயர்பலகையில் தங்கள் பெயர் இடம்பெறாமல் இருப்பதை தவிர்க்க வேண்டுகிறேன். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்படுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !