உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இந்திய ஐக்கிய கம்யூ., கட்சி காத்திருப்பு போராட்டம்

இந்திய ஐக்கிய கம்யூ., கட்சி காத்திருப்பு போராட்டம்

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகம் முன்பு, இந்திய ஐக்கிய கம்யூ., கட்சியினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய ஐக்கிய கம்யூ., வட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். பண்ருட்டி அடுத்த ஒறையூர் கிராமத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த 75 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் கோகுல கிறிஸ்டீபன், வட்ட செயலாளர் தெய்வசிகாமணி, பொருளாளர் மாசிலாமணி பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !